புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு மூவர் போட்டியிடுகின்றனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரே இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தலில் இருந்து ஒதுங்கினார். தமது கட்சியின் ஆதரவை டலஸ் அழகப்பெருமவுக்கு வெளிப்படுத்தினார். டலஸின் பெயரை அவரே முன்மொழிந்தார். இதனை மொட்டு கட்சியின் தவிசாளர் பீரிஸ் வழிமொழிந்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். அதனை மனுச நாணயக்கார வழிமொழிந்தார்.
அநுரவின் பெயர் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டது.
#SriLankaNews