12 2
இலங்கைசெய்திகள்

சஜித் அலுவலகம் மீது தாக்குதல் – ஜே.வி.பி அணி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

Share

சஜித் அலுவலகம் மீது தாக்குதல் – ஜே.வி.பி அணி மக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகம் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு சிலர் அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கட்சி உறுப்பினர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இந்த நாசகார செயலை மக்கள் விடுதலை முன்னணியின் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஜே.வி.பியின் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி மக்கள் தமது கொள்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அடக்குமுறைகளின் ஊடாக மக்களை பயறுமுத்தி தமது இயலாமையை காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, மதவாச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...