rtjy 232 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டா மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்

Share

கோட்டா மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்

கோட்டாபய ராஜபக்சவும் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகள், அவர்கள் இருவரையும் தூக்கிலிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல்.

இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என்று சனல் 4 தொலைக்காட்சி அடையாளம் காட்டியுள்ள கோட்டாபயவும், பிள்ளையானும் மறுப்பு அறிக்கைகளை விட்டுத் தப்ப முயல்கின்றனர்.

அதேவேளை, சனல் 4 தெலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழுவும், அரசு நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் கோட்டாபயவையும், பிள்ளையானையும் காப்பாற்றுவதற்கான திட்டங்களாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் இன்று சர்வதேச சமூகத்தின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும். அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்கக் கூடாது.

கோட்டாபய, பிள்ளையான் மட்டுமல்ல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைக்குத் தான் எந்நேரமும் தயார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்லத் தான் தயார் என்றும் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...