tamilni 430 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

Share

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த நாட்டில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதனை சீனி மாபியா, கிரிக்கெட் மாபியா, கேஸ் மாபியா போன்றனவே தீர்மானிக்கின்றன.

இந்த ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர் என்ற போதிலும் அவர் நாடாளுமன்றை உதாசீனம் செய்து வருகின்றார்.

ரொஷான் ரணசிங்கவை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு நடத்தியது உண்மை எனவும் இது அரசியல் சூழ்ச்சி கிடையாது. கிரிக்கெட் தடையை நீக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.

அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டமில்லை எனவும் மக்களின் ஆணையின் ஊடாகவே ஆட்சி பீடம் ஏறுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...