” பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
பிரதி சபாநாயகர் தேர்வு குறித்து சபையில் கருத்து வெளியிட்ட அவர், இத்தேர்தல்மூலம் பலரின் அரசியல் நாடகம் அம்பலத்துக்கு வந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும், எதிரணியில் உள்ளவர்கள் மக்கள் பக்கம் நிற்பார்கள். அரசியல் நடிகர்களை இணங்காண்பதற்கு இத்தேர்தல் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அத்துடன், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய என்பவரை எதிரணி வேட்பாளராக கருதமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews