25 683eab4ed7b78
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Share

உள்ளூர் சீனி உற்பத்திக்கு 18% வட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50% வட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் செயல்படுவதாக அரசாங்கம் முன்னர் கூறியதாக தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் இன்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18% வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,சுனில் ஹந்துன்நெத்தி, ஒரு பொருளுக்கு மட்டும் வட் வரியை நீக்க முடியாது என்று பதில் வழங்கியுள்ளார்.

இலங்கை வரிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வட் வரியைக் குறைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....