10 32
இலங்கைசெய்திகள்

ரணிலின் பட்ஜெட்டையே அநுரவும் முன்வைப்பு : சஜித் தரப்பு விமர்சனம்

Share

ரணிலின் பட்ஜெட்டையே அநுரவும் முன்வைப்பு : சஜித் தரப்பு விமர்சனம்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வரவு – செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

நாட்டில் 7 தசாப்தகால பயணம் சரி என்பதை அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுள்ளார் என்பதையே பாதீட்டு முன்மொழிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்று பொருளாதார நிபுணரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்கவின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டத்தை அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்பது போல்தான் நிலைமை உள்ளது.

இதுவரை காலமும் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை தோல்வி என்று கூறிவந்த ஜே.வி.பியின் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் நெறிமுறைகளுக்கு அமையச் செயற்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தில் திருத்தம் செய்து அதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தனியார் மயமாக்கல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, நாடு புதிய திசையை நோக்கிச் செல்லவில்லை. 77 வருட கால பயணம் சரி என்பதை ஜனாதிபதி அநுரகுமார ஏற்றுள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...