அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது – 02ஆம் பிரிவு சாஹிரா கல்லூரி வீதியில் இன்று பிற்பகல் வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டின் உடமைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் அருகில் இருந்த இரு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
வீட்டில் மதிய உணவு சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேலையில் மண்ணெண்ணெயை உமி அடுப்பில் ஊற்றும்போது தீ மேலெழுந்தது.
வீட்டினுள் காணப்பட்ட வைக்கோலில் தீ திடீரெனத் பரவியதால் வீட்டில் இருந்த உடைமைகள் முழுமையாக எரிந்து நாசமாகின.
அத்துடன் குறித்த வீட்டுக்கு அருகில் இருந்த இரு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன.
சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை மாநகர தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தனர்.
#SriLankaNews