அடுத்த மாதம் முதல் கட்டாயமாகும் நடைமுறை
இலங்கையில் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுவிடமிருந்து மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமையவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் தயாரிப்புகளில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதை உறுதி செய்ய உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களுக்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏராளமான மதுபானக் கொள்கலன்களில் தற்போது தேவையான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இல்லாததால், சந்தையில் போலி மதுபானங்கள் பெருகி வருவதைத் தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a comment