ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினா செய்ய தீர்மானித்துள்ளார்.
மே முதலாம் திகதி தான் பதவி விலகவுள்ளார் என்ற அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க செயற்பட்டுவருகின்றார்.
பதவி துறப்புக்கான காரணத்தை தெளிவுபடுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சு பதவியை வகித்த நிமல் லான்சாவும், அண்மையில் பதவி துறந்தார்.
#SriLankaNews