இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!!

இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!!

இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!!

நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்யைடித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நொச்சியாகம, பஹலமரகஹவெவ பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த நெதர்லாந்து பெண்ணொருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த குழுவை கண்டுபிடிக்க நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூரிய ஆயுதங்களுடன் வந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல் வெளிநாட்டுப் பெண்ணிடம் இருந்து 350 யூரோக்கள் அடங்கிய கைப்பையையும் சில சாதனங்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version