இலங்கை
இரகசிய மனைவியை பார்க்க சென்ற வெளிநாட்டவர் – இரகசியத்தை கண்டுபிடித்த பொலிஸார்


இரகசிய மனைவியை பார்க்க சென்ற வெளிநாட்டவர் – இரகசியத்தை கண்டுபிடித்த பொலிஸார்
இலங்கையில் எட்டு வருடங்களாக வீசா இன்றி தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் மாரவில மெதகொட பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் சிபோன் என்ற பங்களாதேஷ் பிரஜை நேற்று காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டது, அதன் பின்னர் அவர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் தனது இரகசிய மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வென்னப்புவ பிரதேசத்திற்கு செல்ல தயாராக இருந்தமை தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login