யாழில் வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம்!

IMG 20230524 WA0038

பொலிஸ் தலைமையகத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம் சார்பாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகங்களும் நடத்தப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த, உதவி பொலிஸ் பரிசோதகர் ஐயந்த மற்றும் யேசுராஜ் உள்ளிட்ட குழுவினரும் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கமகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த விஐயவர்தன, காங்கேசன்துறை பிராந்திய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காரியவசம், தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயபால உள்ளிட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

#srilankaNews

Exit mobile version