23 653c7631c9d12
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் இளம் பெண் பலி

Share

கோர விபத்தில் இளம் பெண் பலி

புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்..

புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த ரசிகா பிரியதர்ஷனி என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

புலத்சிங்களவில் இருந்து பரகொட செல்லும் வீதியில், கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், லொறியொன்று நிறுத்தியதன் காரணமாக லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து அந்த இடத்திற்கு வந்த ஒருவர் தாக்கியதில் லொறியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்சிங்கள மரண விசாரணை அதிகாரி சிரத் பரத பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...