குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

9Ty7DD0tu58C99Yf8zMJ 1

குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலை தொடருமானால் நீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் சபை எச்சரித்துள்ளது.

இந்த வரட்சியான காலநிலையில், பழச் செடிகளுக்கு பூக்கள் மற்றும் காய்கறிகளை இடுவதற்கும் வாகனங்களை கழுவுவதற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வரட்சியான காலநிலையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் வெளிலில் இருந்தால் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு லீட்டருக்கும் மேல் அதிகமாக தண்ணீர் பருகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version