மரக்கறி விலைகள் 60 வீதத்தால் உயர்வு!

மரக்கறி விலைகள் அதிகரிப்பு 1

மலைநாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரையில் அதிகரித்துள்ளது என அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் விலை ரூ 650 ரூபா முதல் 700 ரூபா வரை அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version