எரிபொருள் அதிகரிப்பை அடுத்து மரக்கறி விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சிதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நுவரெலியா விசேட பொருளாதார வலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
எரிபொருள் விலை அதிகரிப்பினால் மரக்கறி செய்கை பண்ணையில் இருந்து மரக்கறிகளை கொண்டு செல்வது வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரக்கறிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
மரக்கறிகளின் விலைகள் மிகவும் உயர்ந்து நுகர்வோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது நியாயமற்றது.
கடந்த வருடங்களில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து நத்தார் காலத்தில் நாளாந்தம் சுமார் 400,000 கிலோ மரக்கறிகள் சந்தைக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது அது 40,000 கிலோவாக குறைந்துள்ளது.
#SrilankaNews
Leave a comment