அதிகாிக்கும் உணவுப்பொருட்களின் விலை!

download 11 1 5

இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி கொள்கலன்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ரத்து காரணமாக இறக்குமதியானர்கள் இந்தக் கட்டணங்களை ஏற்க நேரிட்டுள்ளதாகவும் இதன் சுமை நுகர்வோரையே சென்றடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அன்றாடம் நுகரும் சீனி, அரிசி மற்றும் பருப்பு போன்ற பொருட்களின் விலைகளில் இந்த போக்குவரத்து கட்டணங்கள் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

​இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தாது வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்தமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ஜீ.எம். அபேசேகர தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Exit mobile version