நாட்டில் மீ்ண்டும் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீ்ண்டும் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

Share

நாட்டில் மீ்ண்டும் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில் 50 சதவீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கண்டி,கேகாலை, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும்,டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகம் காணப்படுவதால் நோய் பரவும் வீதம் அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...