கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை! – யாழ். வர்த்தகருக்கு ஒரு லட்சம் தண்டம்

1589801840 1589784758 Court L

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், அரிசி தொடர்பான வழக்குகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version