பஸ் கட்டணங்களில் திருத்தம்!

1591086811 bus 2 1

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால் ஜூன் மாதமளவில் பஸ் கட்டணங்கள் மீள் திருத்தப்பட்டு குறைக்கப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு  வருடமும் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்துடன்  தற்போதைய கட்டணம் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கை ரூபாவின் பெறுமதி டொலருக்கு நிகராக உயர்வடையும் நிலையைத் தொடர்ந்து இலங்கையின்  பொருளாதாரம் வழமைக்குத் திரும்பும் என தாம் நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF) வின் கடன் தொகையைப் பெற்ற பின் இலங்கையின் பொருளாதாரம் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version