பேருந்து கட்டணத்தில் திருத்தம்!

download 12 1 1

பேருந்து கட்டணத்தில் திருத்தம்!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கணக்கீட்டு நடவடிக்கைகள்முடிந்ததும், பேருந்து கட்டண திருத்தம் அமல்படுத்தப்படுமா இல்லையா என்பதை அறிவிப்போம் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் டீசல் விலையில் 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்தை குறைக்க முடியாது என அச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Exit mobile version