வெளிவிவகார சேவையில் முக்கிய சில மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளதென அறியமுடிகின்றது.
இதன்படி சில நாடுகளில் உள்ள தூதுவர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டொலர்களை பெறுவதற்கான வழிமுறைகள், நன்கொடைகள் குறித்த திட்டங்களை உருவாக்குமாறு முன்கூட்டியே அறிவித்திருந்தும், அதற்கான நடவடிக்கைகள் சில நாடுகளில் தூதுவர்கள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது உட்பட மேலும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.
#SriLankaNews