நெடுந்தூர பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகள்!

Privete Bus 567657

யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தடங்களை பரிசோதித்தல் , நேர கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற சில நடைமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற விபத்து சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் பூரண விசாரணை அறிக்கை ஒன்றினை கோரியுள்ளேன். அதன் பின்னரே விபத்துக்கான காரணம் தெரிய வரும்.

அதேநேரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவரோடு உரையாடி ஒரு சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

அதாவது யாழ்ப்பாணம் – கொழும்பு மற்றும் ஏனைய இடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சேவையை மேற்கொள்ளும் பேருந்துக்களின் வழித்தட அனுமதிகளை பரிசோதிப்பது.

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில், வடமாகாணத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தரித்து நின்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஓய்வெடுத்து செல்ல கூடியவாறான நிலையை உருவாக்குதல்.

ஒவ்வொரு மாத இறுதியிலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துக்களின் தரத்தினை பரிசோதித்து , அதனை உறுதிப்படுத்தி கொள்ளல். பேருந்து பயணத்திற்கான நேர கட்டுப்பாடுகளை விதித்தல்.

போன்ற விடயங்களை கலந்துரையாடி இருந்தேன். இவற்றை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதன் ஊடாக பேருந்து விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version