4 3
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் சாணக்கியன், சிறிநேசன் உட்பட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

Share

மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக் கூடாதென குறித்த நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கை குடியரசின் தேசிய தினம் கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 08 வது சரத்தில் கூறப்பட்டுள்ளமையும் தடையுத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு,

சபாரத்தினம் சிவயோகநாதன் அல்லது சீலன் (இணையம் அரச சார்பற்ற குழுவின் தலைவர்)
ஞானமுத்து சிறிநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு)
இராசமாணிக்கம் சாணக்கியன் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் )
அமலன் அமலநாயகி (காணாமல் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி)
இளையதம்பி சிறிநாத்
சகாயராசா சுகந்தினி
இருதயம் செல்வக்குமார் அல்லது செல்வா
மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுடன் சேர்ந்து செயற்படும் வேறு எவரேனும் நபர்கள்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...