தமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள கையளிப்பதற்கு போராட்டக்காரர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்களால் இன்று விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு சென்றுள்ளார் எனக் கருதி, அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு தயார் என சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரமே போராட்டக்காரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
எனினும், இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
#SriLankaNews