இடைக்கால கிரிக்கெட் குழுவை இரத்து செய்ய தீர்மானம்

tamilni 207

இடைக்கால கிரிக்கெட் குழுவை இரத்து செய்ய தீர்மானம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரில் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இரத்து செய்ய தீர்மானித்துள்ளார்.

மேலும், இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக அவர் தனது “எக்ஸ்” தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version