கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா உள்ளிட்ட அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்படவுள்ளன என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்களுக்கு தேவையான நிதியான 1.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியால் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் அதன்படி அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் சிக்கிய அனைத்து கொள்கலன்களையும் விடுவிக்க மத்திய வங்கியிலிருந்து 50 மில்லியன் டொலர் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உரிய நிதி வங்கிகளால் விடுவிக்கப்படாமை காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கிடப்பில் உள்ள பால்மா தொகை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தைக்கு கொண்டுவரமுடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.