பதவியிலிருந்து விலகுங்கள்! – பேராயர் கொந்தளிப்பு

download 5 1

“நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத ஆட்சியாளர்கள், பதவிகளில் நீடிக்காது, அதிலிருந்து விலக வேண்டும்.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

“இலங்கையை ஆசியாவின் ஆச்சர்யமாக்குவோம் என்றனர். இன்று யாசகம் பெறும் நிலையில் உள்ளோம். சுபீட்சத்தின் நோக்கு என்றார்கள், சுபீட்சம் எங்கே” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கு சேவையாற்றவே அதிகாரம் வழங்கப்படுகின்றது. அந்த அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற முடியாவிட்டால் விலகுவதே சிறந்த செயலாக அமையும்.

மே 09 ஆம் திகதி சம்பவத்தை அனுமதிக்கமாட்டோம். கொலைகள் மற்றும் வன்முறைகளைக் கண்டிக்கின்றோம். ஆனால் அந்த வன்முறை எங்கிருந்து ஆரம்பமானது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.” எனவும் பேராயர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version