கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

1676196142 death 02

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இறந்த நிலையில் இனங்காணபட்டுள்ளார்.

மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் படுத்து உறங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக இனம் காணப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version