யாழில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது!

430 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடைப்படை தெரிவித்தது.
இன்று அதிகாலை இந்த கஞ்சா கைபெற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கஜான் விக்ரமசூரிய  தெரிவித்தார்.
இதன் போது ஒரு படகுடன் இரண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறைக்கு மேற்கே சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த படகு ஒன்றினை சோதனை செய்ய முற்பட்ட பொழுதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக  நபர்களும் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்ற கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடிக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
IMG 20230403 WA0008 1

#srilankaNews

Exit mobile version