உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !
கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை – ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (17.05.2023) பதிவாகியுள்ளது.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews