ஆணொருவர் சடலமாக மீட்பு!

WhatsApp Image 2022 09 12 at 8.13.32 AM

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று (12.09.2022) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திம்புள்ள – பத்தனை பொலிஸார், தடயவியல் பிரிவு பொலிஸாரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் காயங்களுடன் காணப்படுவதாகவும், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வீதி விபத்தில் உயிரிழந்தாரா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் தொடர்பான அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

 

Exit mobile version