கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

24 66306e7ed48b9

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை

ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தேசிய தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், கர்தினால் சேவை நீடிப்பு கோரியதாக கூறி அரசாங்க அமைச்சர் ஒருவரினால் நாடாளுமன்றத்தில் தவறான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், கர்தினால் சேவை நீடிப்பை கோரவில்லை என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக கர்தினால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வத்திக்கானுக்கு அறிவித்துவிட்டார்.

எனினும், கர்தினால் இன்னும் பணிபுரிய முடியும் என்பதால் அவரை பணியை தொடருமாறு பாப்பரசர் வேண்டுகோள் விடுத்ததாக தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் கர்தினாலை கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version