ranil mp
இலங்கைஅரசியல்செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை உடன் சமர்ப்பிக்குக! – ரணில் வலியுறுத்து

Share

“இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் சபையில் அரசு முன்வைக்க வேண்டும்.”

-இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழியின் பிரகாரம் அந்த அறிக்கை சபையில் இவ்வாரத்துக்குள் முன்வைக்கப்பட வேண்டும்.

அத்துடன், தரவுகள் மற்றும் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் என்பனவும் அவசியம். அப்போது அது பற்றி விவாதிக்கலாம்.

குறிப்பாக சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் முன்வைத்தால், அந்த மாநாட்டிலும் இது பற்றி கலந்துரையாடலாம்” – என்றார்.

குறித்த மாநாட்டுக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இதன்போது உறுதியளித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...