பயணத்தடை நீக்கம்!

diana gamage

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட ​வௌிநாட்டு பயணத்தடையை 5 நாட்களுக்கு நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சரத் ஜயமான்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கும் பின்னர் 28 ஆம் திகதி வரையிலும் வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், அவரது கட்சிக்காரரின் வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்துமாறு கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

#SriLankaNews

Exit mobile version