கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கம்!

banner covid 19 1280x549 1

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் 19 கட்டுப்பாடுகள் சில நீக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சிலவே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொவிட் 19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டமைக்கான அட்டையை இனிவரும் நாட்களில் சமர்ப்பிக்க தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தவிர, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கொவிட் 19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை அறிக்கையையும் இனிவரும் நாட்களில் சமர்ப்பிக்க தேவையில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த நபரொருவர் நாட்டிற்குள் பிரவேசித்ததன் பின்னர் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், குறித்த நபர் தமது சொந்த செலவில் 07 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version