20211021 094941 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்திய இராணுவத்தினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம்!

Share
Share

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் 34 ம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.

20211021 094645 1

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 5
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள பலிகொடுக்கப்படும் அதிகாரிகள்! நாமல் விமர்சனம்

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள அதிகாரிகள் பலிகொடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksha) விமர்சித்துள்ளார்....

10 5
இலங்கைசெய்திகள்

6ஆம் திகதி இலங்கையர்களுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 6ஆம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி...

7 5
இலங்கைசெய்திகள்

இராணுவத்தினருக்கான பேருந்துப் போக்குவரத்துச் சேவை நிறுத்தம்

இராணுவச் சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவையை இடைநிறுத்த இராணுவத் தலைமையகம்...

9 5
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் அரசாங்கத்துக்கு பாரிய சவால்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து...