வங்கிகளில் கடன் பெற்றோருக்கு நிவாரணம்!

central bank of sri lanka

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களின் எதிர்கால கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வணிகம் அல்லது திட்டங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

தற்போதுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அரச நிறுவனங்கள் உட்பட பல தரப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ள நிலையிலேயே மத்திய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version