இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் குறைவடையவுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆகக் குறைந்த 38 ரூபாயாக காணப்படும் கட்டணத்தை 34 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#SriLankaNews