இலங்கையிலிருந்து தப்பியோடிய 130 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

INTERPOL

இலங்கையிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 130 பேருக்கு எதிராக சர்வதேசப் பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாயிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹண அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களது சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடந்த வருடத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 95 ஆயிரம் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,630 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version