ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு! – அமைச்சரவை அனுமதி

சுசில் பிரேமஜயந்த

நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் 8 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

#SriLankaNews

Exit mobile version