Screenshot 20220613 133612 WhatsApp 1 e1655143967952
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தூக்கில் தொங்கியவாறு 8 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Share

நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் – 01 தோட்டத்தின் தனிவீட்டுக் குடியிருப்பில் தூக்கில் தொங்கியவாறு 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் – 01 தோட்டப் பாடசாலையில் தரம் 3இல் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளது.

வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரைக் கம்பத்தில் சேலைப்பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனக் ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம் பெற்ற அன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் எனவும், தாய் மலசலகூடத்துக்குச் சென்றிருந்தார் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

தாய் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்துக் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலைப் பட்டியை அப்புறுப்படுத்திய அயலவர்கள், சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...