வட்டுக்கோட்டையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டுக்கோட்டையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

Share

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார்ர் தெரிவித்துள்ளனர்.

76 மற்றும் 73 வயதுகளையுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

குறித்த வீட்டில் இருவர் மட்டுமே வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவிக்கு யாரும் இருந்ததில்லை என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்றபோதே அவர்கள் இருவரும் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...