111,000 போதை மாத்திரைகள் மீட்பு!

image 189bdc583c

மன்னார்  – சிலாவத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக  இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் பொருட்கள் யாவும்   மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டதுடன், இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version