ஆதரவு வழங்கத் தயார்!

Eran Wickramaratne

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு சிலர் கூறுவதாகவும், பொதுமக்கள், ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சரியான பொருளாதார முடிவுகளை அரசாங்கம் எடுத்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களையே பாதிக்கின்றன எனவே அந்த மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version