மயானத்தை நோக்கி, மக்களை அழைத்துச் செல்வதற்கான பாதையை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நகர்த்திக்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார்.
திஸ்ஸமஹராமவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு சாடியுள்ளார்.
இந்த நாட்டையும், மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றன.
ராஜபக்ச அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும் சவப்பெட்டிக்குள் தள்ளி, அதன்மீது கடைசி ஆணியை அடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
#SrilankaNews

