தகுதியான நபரை நியமிக்க தயார்! – கூறுகிறார் சோபித தேரர்

Omalpe Sobitha

“ஜனாதிபதி பதவி விலக முன்னர், புதிய பிரதமரை நியமிப்பார் என நம்புகின்றோம்.” – என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இணைந்து கொழும்பில் இன்று (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே தேரர் இவ்வாறு கூறினார்.

எனவே, ஜனாதிபதி பதவி விலகியதும் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உட்பட மக்கள் வசம் உள்ள அரச வளங்கள் பாதுகாப்பு தரப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், கட்சி, அதிகார போட்டியை கைவிடுத்து சர்வக்கட்சி அரசுக்காக கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அவ்வாறு வரமுடியாவிட்டால் தகுதியான நபரை நியமிக்க நாம் தயார். தொழிற்சங்க, சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றம் வர, தேசியப்பட்டியல் எம்.பிக்கள் ஐவர் பதவி விலக வேண்டும்.” – என்றும் தேரர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version