ராஜபக்சக்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம். அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் இங்கே விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும்,
கொள்ளையிடப்பட்ட எங்களுடைய பணம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதி யுத்த காலத்தில் 5 லட்சம் வரையான தமிழ் மக்களை ராஜபக்சக்கள் திறந்தவெளிச் சிறையில் அடைத்து வைத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews