நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில்  மலர்வணக்கம்!

XVLNdPHQwPnzLPpIVegp

முள்ளிவாய்க்காலில்  சிங்கள  பேரினவாத   அரசினால்  முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில்  மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி  வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த  நிகழ்வுக்கு பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி  வணக்கம் செலுத்தியதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

#srilankaNews

Exit mobile version